புதிய அனுபவங்கள்.. வியந்து ரசித்த தருணம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் "வானம் கொட்டட்டும்". இந்த படத்தினை மணிரத்னத்தின் உதவி இயக்குனர் இயக்கவுள்ளார். 

இந்த படத்திற்கான இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகை சார்ந்த நபர்கள் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள நபர்கள் வருகை தந்திருந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய சமயத்தில், 

இப்படத்தின் பெயர் தனா. இப்படத்தின் கதையம்சம் வித்தியாசமாக இருந்தது. அண்ணன் - தங்கை உறவு எப்படிப்பட்டது என்று அவர் கூறியது எனக்கு பிடித்திருந்தது. மேலும், மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியுள்ளது. 

aishwarya rajesh,

"நம்ம வீட்டு பிள்ளை" திரைப்படத்திற்கு பின்னரே இப்படத்தில் ஒப்பந்தமான நிலையில், இரண்டிலுமே எனது கதாபாத்திரம் தங்கை தான். இந்த இரண்டு படத்திலும் உள்ள கதாபாத்திரங்கள் மிகவும் வித்தியாசம் கொண்டது. 

நடிகை ராதிகாவுடன் ஏற்கனவே நான் தர்மதுரை திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், இவரின் நடிப்பை நான் வியந்து ரசித்து பார்ப்பேன். இப்படத்தில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. காக்க முட்டை படத்தில் நான் நடிக்கும் போது 22 வயதுதான். குறைவான வயதில் சில கதாபத்திரங்களை ஏற்க மறுக்கின்றனர். நான் நடிக்கிறேன் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aishwarya rajesh speech about dana movie experience


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal