ரசிகர்கள் அதிர்ச்சி! சினிமாவை விட்டு விலகும் சார்பட்டா நடிகை! - Seithipunal
Seithipunal


சார்பட்டா படத்தில் மூலம் பிரபலமடைந்த நடிகை துஷாரா விஜயன் சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் போதை ஏறி புத்தி மாறி என்ற படம் மூலம் அறிமுகமானவர் துஷாரா விஜயன். இவர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை பாடம்  திருப்புமுறையாக அமைந்தது. இதில் துஷாரா விஜயின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

அதனை தொடர்ந்து கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி, உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். தற்போது ரஜினிகாந்துடன் வேட்டையன், விக்ரமுடன் வீரா தீரா சூரா, தனுஷின் ராயன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் சில வருடங்களில் சினிமாவை விட்டு விலகப் போவதாக துஷாரா விஜயன் அறிவித்துள்ளார். இது குறித்து துஷாரா விஜயன் அளித்துள்ளபேட்டியில், எனக்கு 35 வயது ஆகும்போது நான் சினிமாவை விட்டு விலகி விடுவேன்.

அதன் பிறகு படங்களின் நடிக்க மாட்டேன் சுற்றுப்பயணங்களில் ஆர்வம் உள்ளது. 35 வயதுக்கு பிறகு சுற்றுப்பயணங்களில் ஈடுபட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக விளங்கும் துஷார விஜயன் சினிமாவை விட்டு விலகப்போவதாக அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Tushara Vijayan has announced her retirement from cinema


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->