திடீரென திரிஷா எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ந்து போகும் இயக்குனர்கள்.!  - Seithipunal
Seithipunal


சமீபகாலமாக நடிகை திரிஷா ஹீரோயினை மையமாக கொண்டு எடுக்கப்படும் கதைகளை தான் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், அது அவருக்கு பெரிய அளவில் கை கொடுப்பதாக தெரியவில்லை. 

இதனால் நீண்ட வருடங்களாக அவர் தனது சம்பளத்தை உயர்த்தாமல் அப்படியே வைத்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் திரிசாவின் அந்தஸ்து எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டது. அவரது இளவரசி தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 

இதனால் சமீப காலமாகவே திரிசாவுக்கு நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு இயக்குனர்கள் கதை சொல்லி வருவதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் திரிஷாவின் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக நடிகை திரிஷா திடீரென தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை 1.5 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் ஒரே அடியாக டபுள் ஆக்கி மூன்று கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress trisha raised her salary


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal