ராமர் பக்தியை வெளிப்படுத்த வினோத செயலில் ஈடுபட்ட நடிகை.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுகன்யா, அதன் பின்னர் அக்காலகட்ட விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போது தென்னிந்திய மொழிகளில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த நிகழ்வான அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பூமி பூஜை விழா இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. 

பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும், ஆன்மீகப் பெரியவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். கோடிக்கணக்கான மக்களும் தங்களுடைய வீடுகளில் இருந்தவாறு விளக்கு ஏற்றி தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தினர். 

பலரும் சமூக வலைதளங்களில் ஸ்ரீராமர் தொடர்பான புகைப்படங்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் தங்களுடைய பக்தியை பல்வேறு நிலையில் வெளிப்படுத்த நடிகை சுகன்யா தன்னுடைய நெற்றியில் ராமர் உருவத்தையே பொட்டாக வைத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress suganya upload photo to support ayodya sri ramar mandir 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->