தளபதி 68- ல் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?! வியக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்துள்ளார். இதன் சூட்டிங் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்டதாக பட பொது தெரிவித்துள்ளது. திரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இதில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் சூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ளதால் பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

இந்த திரைப்படம் ஆனது வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லியோ படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த, அறிவிப்பு மிகவும் சர்ப்ரைசாக வெளியிடப்பட்டது. தளபதி 68 என்று இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

வெங்கட் பிரபு இயக்குகின்ற இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க உள்ளது. 2024 இல் வெளியாக உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஹீரோயின் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Priyanka mohan In thalapathy 68


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->