பிரபல நடிகையின் தந்தையிடம் அலைபேசி வழிப்பறி... கொந்தளித்து ட்விட்டரில் ரகளை.!! - Seithipunal
Seithipunal


நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜெ சூர்யா நடிப்பில் வெளியான "அன்பே ஆருயிரே" திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை நிலா (மீரா சோப்ரா). இந்த படத்திற்கு பின்னர், சில படங்களில் தமிழில் நடித்திருந்தார். இதன்பின்னர் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்தார். 

கடந்த சில வருடமாக திரைத்துறையில் எந்த விதமான படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், சில ஹிந்தி திரைப்படத்தில் மட்டும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான "செக்சன் 375" படத்தில் நடித்திருந்தார்.

நிலாவின் தந்தை டெல்லி காவல் காலனியில் வாழ்ந்து வந்த நிலையில், அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். இவரை வழிமறித்த மர்ம நபர்கள் அலைபேசியை பறித்து சென்றுள்ளனர். இந்த விஷயம் குறித்து நிலாவுடைய தந்தை டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த விஷயம் குறித்து நடிகை நிலா தனது ட்விட்டர் பக்கத்தில், தலைநகரில் தனது தந்தை நடைப்பயிற்சிக்கு சென்ற சமயத்தில், கத்தியை காட்டி மிரட்டி அலைபேசியை பறித்துள்ளனர். தலைநகரில் உள்ள பாதுகாப்பு இதுவா? என்று கூறியுள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Nila Meera chopra fathers phone robbery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal