90களின் பிரபல நடிகையாக வலம் வந்த நல்லெண்ணெய் சித்ரா காலமானார்.!!
actress nallennai chithra passed away
திரைத்துறையில் 80களில் அறிமுகமானவர் நடிகை நல்லெண்ணெய் சித்ரா. இவர் 90களின் பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால், நல்லெண்ணெய் சித்ரா என அழைக்கப்பட்டார். இவர் இயக்குனர் பாலச்சந்திரனால் அறிமுகம் செய்யப்பட்டார்.

சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ள நடிகை சித்ரா, கடந்த 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மகாலட்சுமி என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள லோகியா தெருவில் மகளுடன் வசித்து வந்த நடிகை நல்லெண்ணெய் சித்ரா, மாரடைப்பு காரணமாக காலமானார். சித்ராவின் திடீர் மரணத்தை அறிந்து திரைத்துறையினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
actress nallennai chithra passed away