நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சிக்கு காரணம் இதுதான்... கண்ணீருடன் பதிவான வாட்சப் ஆடியோ.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சீரியல் நடிகையான ஜெயஸ்ரீ தனது கணவரான ஈஸ்வரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்ப்பினா புகாரில், எனது கணவரான ஈஸ்வர், சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு தன்னை கொடுமைப்படுத்தி வருகிறார்.

இந்த விசயத்திற்கு எனது மாமியாரும் உடந்தையாக இருந்து வருகிறார். இருவரும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாது தன்னிடம் அதிக வரட்சணை கேட்டும் கொடுமை செய்து வருகின்றனர். இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள் என்று கூறியிருந்தார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் ஈஸ்வரை கைது செய்திருந்தனர். 

ஈஸ்வர் - ஜெயஸ்ரீயுடைய மகள், இந்த சண்டைக்கு பின்னர் ஜெயஸ்ரீயுடன் வசித்து வரும் நிலையில், இவர்களுக்குள் பிரச்சனை துவங்கியதில் இருந்து தனது தாயாருக்கு மகள் பெரும் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். இந்த நேரத்தில், குடும்ப பிரச்சனை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக ஜெயஸ்ரீ தற்கொலை முடிவு எடுத்துள்ளார். 

இவரை மீட்ட குடும்பத்தினர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்துள்ள நிலையில், இவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக மகளுக்கு ஆடியோ பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார்.. 

இது தொடர்பான ஆடியோ பதிவில், ரேஸ்.. எனக்கு சரியாக தெரியவில்லை. நான் தற்போது அதிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். எனக்கு வாழ்வதற்கு தகுதியும் இல்லை. என்னை இத்தனை நாட்களாய் நீ என்னை பார்த்து கொண்டதற்கு, இந்த வாய்ஸ் ஆடியோ பதிவை அனுப்புகிறேன். உனக்கு நன்றி.. எனக்கு அதிகளவு தைரியம் சொல்லிருக்க.. முடிந்தால் அவ்வப்போது நண்ணுவை பார்த்துக்கொள்.. பார்த்து பத்திரமா இரு.. என்பதுடன் இந்த ஆடியோ பதிவு கண்ணீருடன் நிறைவு பெற்றுள்ளது. இந்த விஷயம் திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress jayasree suicide attempt viral audio


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal