திடீரென அதிர்ச்சி கொடுத்த நடிகர் தனுஷ்.! மிரளும் இயக்குனர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்பட துறையில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதனை தொடர்ந்து தனது திறமையான நடிப்பினால் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 

ஆரம்பம் முதலே சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர். ஆடுகளம், புதுப்பேட்டை, வட சென்னை, அசுரன், கர்ணன் என அவரின் நடிப்பு நன்முறையில் அனைவராலும் கவரும் அளவிற்கு இருக்கிறது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ் ஆரம்ப காலத்தில் ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கி வந்துள்ளார். ஆனால் இவர் அறிமுகம் செய்த சிவகார்த்திகேயன் ரூ.30 கோடி வாங்கி வருகிறார். இந்த நிலையில் தனுஷும் ரூ.30 கோடியாக தனது சம்பளத்தை சமீபத்தில் உயர்த்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாநாடு வெற்றிக்கு பின் நடிகர் சிம்பு ரூ.38 கோடி சம்பளம் கேட்கிறார். அதனை போல டாக்டர், டான் என்கிற மெகா ஹிட் படங்களை கொடுத்த பின்னர் சிவகார்த்திகேயன் ரூ.40 கோடி கேட்கிறார். அதனால், ரூ.40 கோடி வேண்டும் என தனுஷ் தற்போது கேட்கிறாராம்.

இதனால், அவரை வைத்து படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள் சம்பளத்தை கேட்டு திரும்ப சென்று விடுகிறார்களாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Dhanush Raised His salary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->