சினிமாவில் எனக்கு இவர் தான் போட்டி நடிகர் விஜய் ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில், சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில், விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது, 1990 களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தார்  சில நாட்களில் அவர் எனக்கு கடும் போட்டியாளராக மாறி விட்டார். அவரோட வெற்றியால நானும் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அவரை விட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன். எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை என்றார்.

அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய் என்று விஜய் கூறியதும் ரசிகர்கள் அனைவரும் கத்தி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய அவர், உங்க கூட நீங்க போட்டி போடுங்க. தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மை  ஓட வைக்கும் என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay speech in varisu audio launch


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->