நியூ லுக்கில் களமிறங்கிய நடிகர் விஜய்!
Actor Vijay new look
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி கோட்'. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், யோகி பாபு, அஜ்மல் அமீர், சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஹைதராபாத் என வேகமாக நடைபெற்றது.
இந்நிலையில் 'தி கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவளத்தில் பிரம்மாண்ட வீட்டில் இந்த மாதம் இறுதி வரை நடைபெறும் எனவும் பிறகு ராஜஸ்தானில் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது

இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை கண்டு ஆர்பரித்த ரசிகர்களை பார்த்த விஜய் கையசைத்தார். தாடி மீசை எதுவுமில்லாமல் இளைஞர் போன்று விஜய் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.