234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்த 10&12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி.! - Seithipunal
Seithipunal


பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியலில் போட்டியிட்டு வருகிறார்.

அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்டம் தோறும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 6  மாணவர்களுக்கு நேரில் அழைத்து பரிசு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இதற்கான நிகழ்ச்சி சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஜூன் 3ம் தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay help to 10th and 12th highest marks students


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->