விஜயிடம் தோற்ற ரஜினி! வெறும் 6 லட்சம் தானா? அட கடவுளே! அதிர்ச்சியில் ரசிகர்கள்! 
                                    
                                    
                                   Actor Vijay GOAT vs Rajini Vettaiyan 
 
                                 
                               
                                
                                      
                                            இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படத்தின் கதையில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினாலும், நடிகர் ரஜினியின் நடிப்பு, மற்ற நடிகர்களின் நடிப்பு, அனிருத் இசை கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 
அதே சமயத்தில் வேட்டையின் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்து இருப்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பொதுவாக நடிகர் ரஜினியின் படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த வேட்டையின் திரைப்படத்திற்கு எந்த ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பும் இல்லாமல் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், படத்தின் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளில் வேட்டையன் திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரியவந்துள்ளது.
இதில், தமிழில் 26.15 கோடி, தெலுங்கில் 3.2 கோடி, ஹிந்தியில் வெறும் ஆறு லட்சம் மட்டுமே வசூல் செய்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
நடிகர் விஜயின் கோட் திரைப்படம் முதல் நாளில் 44 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நடிகர் விஜயின் கோட் படத்திடம் ரஜினியின் வேட்டையின் படம் தோல்வியடைந்துள்ளதாகவே விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் 48 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. 
 
                                     
                                 
                   
                       English Summary
                       Actor Vijay GOAT vs Rajini Vettaiyan