ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த நடிகை திரிஷா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஹிட்டான மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா.

அதிலும் குறிப்பாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து திரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். 

இந்த படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், திரிஷா மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அகில் பால் - அனஸ்கான் உள்ளிட்ட இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் 'ஐடென்டிட்டி'. 

இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு திரிஷா தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor trisha see fans in erode


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->