தல ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான அறிவிப்பு.! வலிமை அப்டேட் வெறித்தனம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமார் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. நேர்கொண்டபார்வை கூட்டணியே இந்த படத்திலும் தொடர்கிறது. 

போனிகபூர் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவில்லை. 

இந்த படத்தில் அஜித்துடன் ஹூமா குரோஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். பொங்கலுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்துள்ளது. இருப்பினும் அதற்கு வாய்ப்பில்லை என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

வெறிபிடித்து அலையும் தல ரசிகர்கள்.! முதல்வரிடம் செய்த சேட்டை., அப்செட்டில்  அஜித்.! - Seithipunal

​பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே தயாரிக்கப் பட்டு விட்டாலும், தற்போது வெளியிட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. கொரோனா எல்லாம் குறைந்து படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் போஸ்டரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

வலிமை படத்தின் முக்கிய காட்சிகளை ஐரோப்பிய நாடுகளில் முன்னதாக எடுக்க முடிவு செய்திருந்த நிலையில், இயக்குனர் ஹெச் வினோத் தற்போது புனேவில் அக்காட்சிகளை படமாக்கி வருகிறாராம்.

இத்தகைய சூழலில், வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 11 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும். அதன் பிறகு வலிமை படத்தின் அப்டேட் குறித்த தகவல்கள் வரிசையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor thala ajith valimai movie mass update 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->