கங்குவா : புத்தாண்டில் புது அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா.! - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். 

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான போஸ்டரை நடிகர் சூர்யா வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டுள்ள உறுதி செய்துள்ளது.

அந்த போஸ்டரில் சூர்யா இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் எதிரெதிரே பார்த்துக்கொண்டிருக்கிறார். ஒருவர் கையில் கத்தியும், மற்றொருவர் கையில் துப்பாக்கியும் உள்ளது. இந்தப் போஸ்டரில் படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya share kanguva movie post


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->