வில்லன் நடிகரின் குழந்தைத்தனம்.. உதவி என்று முக்கியமானதை கேட்ட ரசிகர்..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்தை நெருங்கியுள்ளது. சுமார் 3.50 இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சேவையில் சிறந்த நாடுகள் கூட பெருமளவில் திணறி வருகிறது. 

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தொடர் ஊரடங்கின் காரணமாக அன்றாடம் பணி செய்து வாழ்ந்து வந்த நபர்களின் வருமானம் பாதிக்கப்பட்டு பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பல்வேறு தரப்பில் உதவி செய்து வருகின்றனர். 

பிரபல வில்லன் நடிகரான சோனு சூட் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க தனது நட்சத்திர விடுதியை அனுப்பினார். இதுமட்டுமல்லாது தினமும் சுமார் 45 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். 

சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த செலவில் ஊர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகிறார். இதனால் இவரிடம் நேரடியாக சமூக வலைத்தளம் மற்றும் அலைபேசி வழியாக பலரும் உதவி கேட்டு வருகின்றனர். உதவிக்கான தகவலை வைத்து பல உதவியையும் செய்து வருகிறார். 

இந்நிலையில், நடிகர் சோனுவிடம் ட்விட்டர் வாயிலாக ரசிகர் தனது பிகார் காதலியுடன் தன்னை சேர்த்து வைக்க கூறி கோரிக்கை வைக்கவே, இதற்கு பதில் அளித்த நடிகர் சோனு " உங்களின் உண்மையான காதலுக்கு வந்த சோதனை காலம் இது.. சில நாட்கள் விலகியிருக்கலாம் சகோதரா " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Sonu Sood help


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal