PS-2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் நடிகர் சிம்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! 
                                    
                                    
                                   Actor simbu participate in ponniyin Selvan 2 Audio launch 
 
                                 
                               
                                
                                      
                                            மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.
பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு இன்று நடைபெற உள்ளது.

அதன்படி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சிம்பு பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடிக்க இறுதியாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
                                     
                                 
                   
                       English Summary
                       Actor simbu participate in ponniyin Selvan 2 Audio launch