#HBD பிரித்விராஜ்: மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் கலக்கும் நடிகருக்கு பிறந்தநாள்.!! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு இன்று பிறந்தநாள்.

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இந்திய நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 

அதனைத்தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட 80 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறிமுகமான நடிகர் ஆனார். கடந்த 2006 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் அவர் பெற்றுள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் சுகுமாரன் - மல்லிகா தம்பதிக்கு மகனாக பிரித்விராஜ் கடந்த 1982 ஆம் வருடம் அக். 16 ஆம் தேதி பிறந்தார். பிரித்வி ராஜின் பெற்றோர்கள் இருவரும் நடிகர்கள் ஆவார்கள். கடந்த ஏப்ரல் 25, 2011 ஆம் ஆண்டு பி.பி.சி இந்தியா தொலைக்காட்சி செய்தியாளர் சுப்ரியா மேனனைத் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2005 ஆம் வருடம் வெளியான கனா கண்டேன் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான பிரித்விராஜ், பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், இராவணன், காவியத்தலைவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இன்று அவருக்கு பிறந்தநாள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Prithviraj Sukumaran Birthday Today 16 Oct 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->