பிரபல நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் பிரபு. இவர் தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மகனான இவருக்கு விக்ரம் பிரபு என்ற மகனும், ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் பிரபு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை மூலம் கல் அகற்றப்பட்டுள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டிற்கு திரும்புவார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Prabhu admitted in hospital


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->