#BiGBreaking : பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.! மருத்துவமனை செல்லும் வழியிலேயே சோகம்.!  - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். 

நடிகர் மயில்சாமி இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். 1985-ம் வருடம் வெளியாகிய கன்னிராசி திரைப்படம் தான் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அவர் அறிமுகமான படமாகும்.

சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த நடிகர் மயில்சாமி பலகுரல் மன்னனாக திகழ்ந்தவர். இவர் திரைப்பட தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 - ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக வேட்பாளராக போட்டியிட்டவர் நடிகர் மயில்சாமி. 

அத்துடன் பெருந்தொற்று கொரோனாவால் பலரும் அவதிப்பட்ட காலத்தில் அவர்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்தவர் தான் நடிகர் மயில்சாமி. இந்த நிலையில், அவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.  

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு கேளம்பாக்கம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்ட நிலையில், தான் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது இறப்பு செய்தியை அவரது மகன் உறுதிபடுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Mayilsamy died


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->