தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவர் ஜமுனா. இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

சினிமாவில் பிரபல நட்சத்திரங்களான சிவாஜி மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், "தூங்காதே தம்பி தூங்காதே" என்ற படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார். 

இவர் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன் மற்றும் தங்கமலை ரகசியம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கு கடந்த1999 ஆம் ஆண்டு தமிழக அரசின் எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது. 

இதையடுத்து, இவர் 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆந்திரா மாநிலத்தின் ராஜமுந்திரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர். அதன் பின்னர் 1990 ல் பாஜக கட்சியில் இணைந்து அந்தக் கட்சிக்காக பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தார். 

இந்த நிலையில், இன்று நடிகை ஜமுனா உடல் நலக் குறைவால் ஐதராபாத்தில் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jamuna passed away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->