சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் பிரபல நடிகை - யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் பிரபல நடிகை - யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க உள்ளார். 

இந்தப் படத்தினை ‘ஜெய்பீம்’ படத்தின் ஞானவேல் இயக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் நடித்து வரும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. 

இந்த நிலையில், இந்தப் படத்தில்,‘சார்பட்டா பரம்பரை’ என்றத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை துஷாரா விஜயன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரக்கூடிய ‘டி50’ படத்திலும் துஷாரா பெயர் அடிபடுகிறது. ஒரே நேரத்தில் தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் துஷாரா. ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dushara vijayan joined super star movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->