தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


கடந்த 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி. இதைத் தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடிகர் போண்டா மணி நடித்துள்ளார்.

மேலும் ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். சென்னை பொழிச்சலூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் போண்டா மணி சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இருப்பினும், 2 சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்து வந்தனர். இந்த நிலையில், நடிகர் போண்டா மணி நேற்றிரவு வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவித்தனர். நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor bonda mani passed away


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->