முழுக்க முழுக்க குடும்ப படம் தான் - வீடியோவில் போட்டுடைத்த பார்த்திபன்.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் பார்த்திபன் இயக்கிய 'இரவின் நிழல்' என்ற திரைப்படம் ரசிகர்களிடம் பல கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விருதுகளை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். 

இசையமைப்பாளர் இமான் இசை அமைக்கும் இந்தப் படம் குறித்து பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நான் இயக்கி வரும் ஒரு புதிய படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்பேன். 

நான் எடுக்கும் திரைப்படம் ரசனை மிகுந்தவர்களுக்கான திரைப்படம். முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடவும் குழந்தைகள் ரசிக்கவும் ஒரு படம் தயாராகிறது. அந்த படத்திற்கான டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. 

என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் படத்தில் உள்ள தவறுகளை திருத்தி உங்கள் பார்வைக்கு எடுத்து வருவேன்; படத்தில் VFX பணிகள் நிறைய உள்ளன. நாம் வழக்கமாக ஹாலிவுட் படங்களை மட்டுமே கொண்டாடுவோம். 

ஹாலிவுட் படங்களைபோல நம்மால் எடுக்கமுடியாது. ஆனால் நமக்கு இருக்கும் ஒரே கட்டுப்பாடு படத்தின் பட்ஜெட்தான்' . அவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அவ்வையார், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

நான் எடுக்கும் படம் பிரம்மாண்டமான படம் அல்ல. ஆனால் ரொம்ப நுணுக்கமான படம். நான் விரைவில் உங்களை நல்ல படத்துடன் சந்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor and director parthiban vedio published new movie update


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->