நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி.. கேன்ஸ் திரைப்பட விழா புறகணிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும் கூட உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் "நேற்று காலையில், நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். நான் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தங்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மிக விரைவில் மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்புவேன். உங்கள் அன்பான வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க உள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Akshay Kumar affected covid positive


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->