இனி நடிக்க மாட்டேன் - அஜித்தின் முடிவால் அதிர்ந்துபோன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை தவிர கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அதிலும் குறிப்பாக படப்பிடிப்பு முடிந்த காலகட்டங்களில் சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். 

இதற்கிடையே இவரது நடிப்பில் திரைக்கு வர உள்ள விடாமுயற்சி, 'குட் பேட் அக்லி' படங்களின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில், நடிகர் அஜித் இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ஓர் அணியை ஏற்படுத்தியுள்ளார். 

அதாவது, துபாயில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயம் நடைபெறுகிறது. அதற்காக துபாய் வந்த நடிகர் அஜித்குமார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித், அக்டோபர் மாதம் வரை நடிக்கப் போவது இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- "18-வயதில் ரேசிங் தொடங்கினேன். அதன்பின் சினிமாவில் நடித்து வந்ததால் ரேசில் பங்கேற்கவில்லை. 2010- ஆம் ஆண்டு European-2 இல் களமிறங்கினேன். 

பின்னர் போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. தற்போது கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor ajith announce no acting until october


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->