இணையத்தில் வைரலாகும் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் திருமணம் வீடியோ! வசமாக சிக்கிய அதிதி மேனன்!
actor abi saravanan and adhiti menon marriage video
டூரிங் டாக்கீஸ், சாகசம் ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். கடந்த 2016-ம் ஆண்டு இவரும், நடிகை அதிதி மேனனும் இணைந்து பட்டதாரி என்ற படத்தில் நடத்து இருந்தனர்.
இந்த படத்திற்கு பிறகு ரகசியத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்ததாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபி சரவணனை யாரோ சிலர் காரில் கடத்தி சென்றுள்ளனர். அதற்குப்பிறகு அபி சரவணனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனதை தொடர்ந்து அவரது தந்தை காவல் நிலையத்தில் தன் மகனை யாரே கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.

நடிகை அதிதி மேனன் சில நாட்கள் முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியவை, நானும், அபி சரவணனும் ‘பட்டதாரி’ என்ற படத்தில் இணைந்து நடித்தோம். அதன் பிறகு எங்களுக்குள் நட்பு மட்டுமே உள்ளது. இதை பயன்படுத்திக்கொண்டு நடிகர் அபி சரவணன், நான் அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார்.
சென்னை சாலிகிராமம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அபி சரவணன், நானும், அதிதி மேனனும் பதிவு திருமணம் செய்து கொண்டது உண்மை தான். இதற்கான ஆவணங்களும், போட்டோஸ் தன்னிடம் இருப்பதாக கூறி அதை செய்தியாளர் மத்தியில் கூறினார்.

போட்டோஸ், ஆவணங்களை காட்டி அவர் பேசுகையில், தற்போது அதிதியுடன் இருக்கும் ஆண் நண்பர் உள்பட சிலர் அவரை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைத்துள்ளனர். அதிதி மேனம் மனம் திருந்தி வந்தால் மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவர் தொிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் அதிதி மேனனுக்கு, அபி சரவணன் தாலி கட்டுவது பதிவாகி உள்ளது.
English Summary
actor abi saravanan and adhiti menon marriage video