தங்கம் எப்போது விலை குறையும்! கண்ணாமூச்சி ஆடும் தங்கம்! விலை இனி எப்படி இருக்கும்? சர்வதேச நிதி நிறுவனம் கணிப்பு!
When will the price of gold fall Gold is playing hide and seek! What will the price be like now International Monetary Fund predicts
சமீபத்திய சில நாட்களில் தங்க விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
நேற்றும், நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்திருந்ததால், “இப்போ தங்கம் அடியில் போயிடுமோ?” என்று பலரும் நம்பியிருந்தனர். ஆனால், அதற்கு மாறாக ஒரு பெரிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல நிதி சேவை நிறுவனமான ஜேபி மோர்கன் (JP Morgan) தங்கத்தின் எதிர்கால விலை குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,“2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்குள், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சராசரியாக 5,055 டாலரை எட்டும்” என்று ஜேபி மோர்கன் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரு அவுன்ஸ் என்றால் 31.1 கிராம்.அதாவது சுமார் 4 சவரன் தங்கம்.தற்போது இதன் மதிப்பு ரூ.3.7 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை இருக்கிறது.அடுத்த ஆண்டு இதே அளவு தங்கம் ₹4.43 லட்சம் வரை உயரக்கூடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 566 டன் தங்கம் வரை முதலீட்டாளர்களும், மத்திய வங்கிகளும் சேர்த்து கொள்முதல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேவைதான் எதிர்காலத்தில் தங்க விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக அமையும் என மோர்கன் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஜேபி மோர்கனின் தலைவர் நடாஷா கனெவா,“இந்த ஆண்டுக்கான எங்களது முதலீட்டுத் தேர்வில் தங்கமே முதலிடத்தில் உள்ளது. ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்கும் நேரத்தில் தங்கத்தின் மதிப்பு வேகமாக உயரும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பது, பணவீக்கம், பொருளாதார தேக்கம் ஆகியவை ஒன்றிணைந்து தங்கத்துக்கு பெரிய பலனாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது தங்கத்தின் மதிப்பு உயரும் என்பது பொருளாதார விதி.
இப்போது அதுவே நடக்கிறது.
சீனா தன்னிடம் இருந்த அமெரிக்க டாலரை சந்தைக்கு வெளியேற்றி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மற்ற நாடுகளும் அதேபோல் செய்கின்றன. இதனால் டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது.
அதன் விளைவாக பல நாடுகள் தங்க முதலீட்டில் மாறி வருகின்றன.மேலும், பிரிக்ஸ் நாடுகள் (BRICS) எதிர்காலத்தில் சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்யத் தொடங்கினால், டாலரின் தேவை மேலும் குறையும் — இதுவும் தங்க விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்றத்தை சந்தை இப்போது சீர்செய்து வருகிறது.
ஆனால் நிபுணர்கள் கூறுவதாவது —“இது தற்காலிகம் தான். வாங்குபவர்கள் அதிகம், விற்கும்ோர் குறைவு. எனவே விலை மீண்டும் உயர்வது உறுதி.”
அதுமட்டுமல்ல, 2028 ஆம் ஆண்டிற்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,000 டாலர் வரை செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தங்கம் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதத்துக்கான முதலீடு அல்ல.பல ஆண்டுகள் பாதுகாப்பான முதலீடாகவே பார்க்க வேண்டும் என்பதும் நிபுணர்கள் வலியுறுத்தும் முக்கிய அம்சம்.
இந்த ஆண்டு மட்டும் தங்கம் பல சாதனைகளை முறியடித்துள்ளது.சமீபத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,381 டாலரைத் தாண்டி, 1979க்குப் பிறகு மிகச் சிறந்த ஆண்டு செயல்திறனை பதிவு செய்துள்ளது.
எனவே, தங்கத்தின் தற்போதைய குறைவு — ஒரு “பெரிய பாய்ச்சலுக்கு” முன் வரும் அமைதிதான் என்று நிதி வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
English Summary
When will the price of gold fall Gold is playing hide and seek! What will the price be like now International Monetary Fund predicts