மாற்றுத்திறனாளிகளின் மனம் இணைந்த நாள்! தூத்துக்குடியில் 5 ஜோடிகள் அன்பின் பந்தத்தில் இணைந்த அதிசய திருமண விழா...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி சிறப்பு சுயம் வரம் நிகழ்வை ஏற்பாடு செய்தது. இதில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர் இரண்டு குடும்பங்களும் இணைந்து கலந்துரையாடிய பின்னர், ஐந்து ஜோடிகள் திருமணப் பந்தத்தில் இணைவதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, நேற்று காலை மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் இந்த ஐந்து ஜோடிகளுக்கும் அழகிய திருமண விழா நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர்.ஒவ்வொரு ஜோடிக்கும் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில், தங்கத் தாலி, மணமக்கள் அணியும் உடைகள், மிக்ஸ்சி, கிரைண்டர், டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், மெத்தை, தலையணை, பீரோ, சேர், குக்கர், மின் விசிறி, சூட்கேஸ், ஸ்டூல், சமையல் துணை உபகரணங்கள், மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான பலசரக்கு மற்றும் அரிசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான பரிசுகள் இந்த ஐந்து ஜோடிகளுக்கும் அளிக்கப்பட்டன.இவ்விழாவில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், தன்னார்வ அமைப்புகள், மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக இணைந்த மணமக்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லூசியா இல்ல இயக்குநர் ஜான் பென்சன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள் சிறப்பாக கவனித்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

day when hearts differentlyabled individuals united wedding Thoothukudi 5 couples joined bondlove


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->