பெண்களுக்கு நெஞ்சுவலி வரவழைக்கும் தங்கம் விலை ஏற்றம்...! இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா...?
today gold price rate
தங்கம் விலை மீண்டும் வானை தொட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக நிலையாக உயர்ந்து வந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ₹97,600 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் இன்று ₹12,200க்கு விற்பனையாகிறது.இல்லத்தரசிகள் முதல் சுபநிகழ்ச்சிக்கு தயாராகும் குடும்பங்கள் வரை தங்கம் விலை ஏற்றத்தில் கவலையில் மூழ்கியுள்ளனர்.

மேலும், முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளி வாங்கும் ஆர்வம் அதிகரிப்பதும், சர்வதேச போர் பதற்றமும் விலை ஏற்றத்துக்கு காரணமாகியுள்ளது.வெள்ளி விலை மட்டும் இன்று சிறிதளவு சரிவு கண்டது. ஒரு கிராம் ₹203, ஒரு கிலோ ₹2,03,000க்கு விற்பனை.
கடைசி 5 நாட்களின் தங்கம் விலை:
17.10.2025 – ₹97,600
16.10.2025 – ₹95,200
15.10.2025 – ₹94,880
14.10.2025 – ₹94,600
13.10.2025 – ₹92,640