மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம்..
Today gold price
கடந்த ஒரு மாதமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 54 ஆயிரத்து 160 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 15 உயர்ந்த ரூ. 6770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 50 காசுகள் குறைந்து ரூ. 87.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 87 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.