ஒரே மாதத்தில் இரண்டு முறை உயர்ந்த நூல் விலை - அதிர்ச்சியில் தொழில் துறையினர்.! - Seithipunal
Seithipunal


நடப்பு மாதத்தின் முதல் 2 வாரங்களுக்கான நூல் விலையை நூற்பாலைகள் கடந்த 1-ம் தேதி அறிவித்தது. அதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நூற்பாலைகள் நேற்று மீண்டும் நூல் விலையை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தியிருக்கிறது. இந்த விலை உயர்வு தொழில் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: "பஞ்சு, நூல் விலைஉயர்வால் ஜவுளித் தொழில் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.

பருத்தியை பதுக்கிவைத்து, செயற்கையாக விலையை உயர்த்துகின்றனர். பருத்தி விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஜவுளித் தொழில் துறை சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், உண்மை நிலையை ஆட்சியாளர்கள் உணரவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thread price increase 10 rupees


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->