தள்ளிப்போன ‘வா வாத்தியார்’ – ஹைப்பை தக்கவைத்துக் கொண்ட கார்த்தி – இயக்குநர் கொடுத்த செம ட்விஸ்ட்.. ஆத்தாடி என்ன இப்படி சொல்லிட்டாரு? - Seithipunal
Seithipunal


கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதும் பாராட்டப்பட்டது. பிரேம்குமார் இயக்கத்தில் உருவான அந்த படம் அழகியலின் உச்சம் என ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டாலும், வணிக ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வசூலை பெறவில்லை என்பது கார்த்தி ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றமாகவே அமைந்தது.

இந்தச் சூழலில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமானது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. உதவி இயக்குநர் பின்னணியிலிருந்து வந்த கார்த்தி, கதைத்தேர்வில் எப்போதும் தனித்துவம் காட்டுபவர். ஒவ்வொரு படத்திலும் வேறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் அவர், நலன் குமாரசாமியுடன் முதன்முறையாக இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் ஆவலை ஏற்படுத்தியது.

பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ‘வா வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற தொழில்நுட்ப பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. கார்த்திக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆனால் இத்தனை ஹைப்புகளுக்கிடையிலும், ‘வா வாத்தியார்’ தொடர்ந்து ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எதிர்கொண்ட பொருளாதார சிக்கல்களே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் அது மாற்றப்பட்டதும் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது.

பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பின் கடன் விவகாரங்கள் தொடர்பாக, முழுமையாக பணம் செலுத்தினால்தான் படம் வெளியிட முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்ததால், இந்தப் பொங்கலுக்கும் ‘வா வாத்தியார்’ திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொங்கலுக்கு வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ படம் சென்சார் சிக்கல்களால் தள்ளிப்போனது ‘வா வாத்தியார்’ போன்ற படங்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது. போட்டி குறைவான சூழலில் படம் வந்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ரிலீஸ் தாமதமானாலும், ‘வா வாத்தியார்’ படத்திற்கு இருக்கும் ஹைப் குறையவில்லை. அதற்கு முக்கிய காரணம் கார்த்தியின் தேர்வும், இயக்குநர் நலன் குமாரசாமியின் பெயரும் தான். இதுவரை அவர் இரண்டு படங்களே இயக்கியிருந்தாலும், அவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ‘வா வாத்தியார்’ குறித்து ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நலன் குமாரசாமி,“நலன் குமாரசாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் ‘வா வாத்தியார்’ முழுக்க அந்த மாதிரியான படம் மட்டும் அல்ல. அதற்காக ரசிகர்களை ஏமாற்றவும் மாட்டேன். கொஞ்சம் வேறுபட்ட பாதையில் மெனக்கெட்டு ஒன்றை செய்திருக்கிறேன்”
என்று கூறியுள்ளார்.

இதனால், தள்ளிப்போனாலும் ‘வா வாத்தியார்’ கார்த்தி – நலன் குமாரசாமி கூட்டணியில் ஒரு முக்கியமான படமாகவும், வெளியான பிறகு நல்ல வரவேற்பைப் பெறக்கூடிய படமாகவும் அமையும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே வலுவாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The postponed Vaa Vaathiyaar Karthi maintains the hype the director great twist What did Aathadi say


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->