ரூ.11.49 லட்சத்தில் அறிமுகமான டாடா சியாரா – இந்தியாவின் முதல் “கார்-டு-கார் கிராஷ் டெஸ்ட்” காட்டி பாதுகாப்பை நிரூபித்த டாடா!
Tata Ciara launched at Rs 11 lakh Tata proves safety by performing India first car to car crash test
டாடா மோட்டார்ஸின் புதிய தலைமுறை சியாரா எஸ்யூவி இந்திய கார் சந்தையில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டநாள் எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்து, சியாரா ரூ.11.49 லட்சம் ஆரம்ப எக்ஸ்–ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு டிசம்பர் 16 முதல் தொடங்க, வாடிக்கையாளர் டெலிவரி ஜனவரி 15, 2026 முதல் வழங்கப்படும்.
இந்த அறிமுக விழாவின் முக்கிய அம்சமாக டாடா மோட்டார்ஸ் ஒரு முன்னெப்போதும் செய்யப்படாத தனித்துவமான பாதுகாப்பு சோதனையை வெளியிட்டது. பொதுவாக கிராஷ் டெஸ்ட் என்றால் கார் அசையாத சுவரில் மோதும். ஆனால் இப்போது டாடா, இரண்டு நகரும் சியாரா வாகனங்களை நேருக்கு நேர் மோதவிட்டு “ரியல்-வேர்ல்ட் கிராஷ் சூழல்” உருவாக்கி பாதுகாப்புத் திறனை நிரூபித்தது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் முதல்முறையாகும்.
இந்த கார்-டு-கார் மோதலில் இரண்டு வாகனங்களின் முன்பகுதி சேதமடைந்தாலும், மிக முக்கியமான A-பில்லர் எந்த சேதமும் பெறவில்லை. இதனால் பயணிகளின் கேபின் பகுதி முழுமையாக பாதுகாப்பாக இருந்தது என்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். டாடா வாகனங்கள் ஏன் பாதுகாப்பு தரத்தில் முன்னணியில் உள்ளன என்ற கேள்விக்கு இந்த சோதனைதான் சரியான பதிலாக ரசிகர்கள் கருதுகின்றனர். வல்லுநர்கள் கூறுவதாவது, சியாரா பரத் NCAP மற்றும் Global NCAP இரண்டிலும் 5–ஸ்டார் மதிப்பெண் பெறும் வாய்ப்பு மிக அதிகம்.
பாதுகாப்பு அம்சங்களில் டாடா எவ்வித சமரசமும் செய்யவில்லை. 6 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. அதன்மீது 20+ நிலை 2 ADAS தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 360-டிகிரி கேமரா, பிளைண்ட்–ஸ்பாட் மானிட்டரிங், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அம்சங்கள் ஓட்டுநர் பாதுகாப்பை இன்னும் உயர்த்துகின்றன.
வலுவான கட்டமைப்பு, மேம்பட்ட கிராஷ் செயல்திறன், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமான பாதுகாப்பு வசதிகளால், டாடா சியாரா இந்திய சாலைப் பயணங்களுக்கு மிக நம்பகமான மற்றும் கவர்ச்சியான எஸ்யூவியாக திகழும் என்பதை இந்த அறிமுகம் மீண்டும் நிரூபித்துள்ளது.
English Summary
Tata Ciara launched at Rs 11 lakh Tata proves safety by performing India first car to car crash test