2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா 2026 டி20 உலகக் கோப்பையை வெல்வதை டிவில பாப்பேன்..ரோஹித் பேட்டி
2026 T20 World Cup I will watch India win the 2026 T20 World Cup on TV Rohit interview
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ள இந்த தொடரில், நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்கள் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைத்து வரலாறு படைக்கத் தீவிரப்பட உள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் சேர்த்திருப்பது, ஐசிசி அறிவித்த பிராண்ட் அம்பாசிடர். இந்தியாவின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2007 முதல் 2024 வரை நடைபெற்ற ஒன்பது டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடிய ஒரே இந்திய வீரர் என்ற அரிய சாதனை அவரது பெயரில் உள்ளது. 2007-ல் வீரராகவும், 2024-ல் கேப்டனாகவும் கோப்பையை வென்றது அவரை டி20 வரலாற்றின் தனித்துவமான நாயகனாக மாற்றியுள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு (2011), இன்னும் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே ஒரு ஐசிசி தொடரின் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட இந்திய வீரர் என்ற கௌரவத்தை ரோஹித் சர்மா பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் உலகக் கோப்பை குறித்து தனது எதிர்பார்ப்புகளை பகிர்ந்த ரோஹித் கூறினார்:
“இது மிகப்பெரிய கௌரவம். விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களை ஐசிசி அம்பாசிடராக நியமிப்பது அரிது. எனக்கு அந்த பொறுப்பு கிடைத்தது பெருமை. இந்திய அணியில் இப்போது வித்தியாசமான திறமையுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மீண்டும் கோப்பையை வென்றால் அது ஒரு மேஜிக் தருணமாக இருக்கும்.”
ரோஹித் மேலும் தெரிவித்தார்:
“18 வருட சர்வதேச பயணத்தில் ஆரம்பத்தில் ஒரு ஐசிசி கோப்பை, முடிவில் தொடர் 2 கோப்பைகள் (2024, 2025). இதற்கிடையில் நீண்ட இடைவெளி இருந்தாலும், பசியுடன் காத்திருந்த நாங்கள் சாதித்தோம். இந்த உலகக் கோப்பையை நான் இம்முறை வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்ப்பேன். இந்தியா கண்டிப்பாக சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்” என்றார்.
இந்திய ரசிகர்கள் 2024-இல் நடந்த அதிரடி வெற்றிக்குப் பின், 2026-இல் தங்கள் மண்ணில் மீண்டும் உலகக் கோப்பையை உயர்த்தித் தாங்குவார்களா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவாகியுள்ளது.
English Summary
2026 T20 World Cup I will watch India win the 2026 T20 World Cup on TV Rohit interview