ராயல் என்ஃபீல்டின் புதிய புதிய புல்லட் 650 அறிமுகம்! ட்வின் சிலிண்டர் இன்ஜின் பைக்! விலை எவ்வளவு தெரியுமா?
Royal Enfield new Bullet 650 launched Twin cylinder engine bike Do you know how much it costs
சென்னை: பைக்கர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய புல்லட் 650 (Bullet 650) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பிரம்மாண்ட பைக், இத்தாலியில் நடைபெற்று வரும் EICMA 2025 மோட்டார் நிகழ்வில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புல்லட் 650 பைக், ரெட்ரோ டிசைன் ஸ்டைலுடன், 650cc பெரிய இன்ஜினை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. கிளாசிக் 650 பைக்கின் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, அதனை புல்லட் சீரியஸின் பாரம்பரிய வடிவமைப்புடன் இணைத்துள்ளனர்.
கேனன் பிளாக் மற்றும் பேட்டில்ஷிப் ப்ளூ எனும் இரண்டு சிறப்பு நிறங்களில் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்கில் கையால் வரையப்பட்ட பின்ஸ்ட்ரிப் லைன்கள் மற்றும் தங்க நிற மெட்டல் லோகோ பேட்ஜ்கள் பைக்கிற்கு ராயலான தோற்றத்தை வழங்குகின்றன.
புதிய புல்லட் 650 பைக்கில், ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளில் பயன்படும் அதே 648cc பேரலல் ட்வின் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின்:
47 ஹார்ஸ் பவர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது
52.3 Nm டார்க் வழங்குகிறது
6-ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உடன் வருகிறது
இது பைக்கை சாலையில் மிருதுவாகவும் சக்திவாய்ந்ததுமானதாகவும் மாற்றுகிறது.
பைக்கின் முன்புறத்தில் ஷோவா டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் (120 mm travel) மற்றும் பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர் (112 mm travel) கொடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நகரப் போக்குவரத்து மற்றும் நீண்ட தூர பயணங்களில் கூட பைக் சிறந்த நிம்மதியையும் நிலைத்தன்மையையும் வழங்கும்.
பைக் டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உடன் வருகிறது. அதில்:
அனலாக் ஸ்பீடோமீட்டர்
டிஜிட்டல் ஓடோமீட்டர்
எரிபொருள் அளவு டிஸ்பிளே
டிரிப்பர் நேவிகேஷன் பாட் (Google Maps இணைப்பு) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
புல்லட் 650 பைக், புல்லட் 350க்கு அடுத்தபடியாக அதிக சக்தி வாய்ந்த மாடல் ஆகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொண்ட புல்லட் தொடரில் இது மிகப் பெரிய அப்டேட்.
அலுமினியம் பாலிஷ்டு ஸ்விட்ச்கியர், அட்ஜஸ்டபிள் கிளட்ச் மற்றும் பிரேக் லீவர், மற்றும் குரோம் ஹெட்லைட் ஹூட் போன்ற அம்சங்கள் பைக்கின் ரெட்ரோ கவர்ச்சியை அதிகரிக்கின்றன.
தற்போது சர்வதேச அளவில் அறிமுகமான புல்லட் 650 பைக், இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறும் மோட்டோவெர்ஸ் 2025 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராதபோதிலும், ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக்கை 2026 ஆரம்பத்தில் இந்திய சந்தையில் வெளியிடும் வாய்ப்பு உள்ளது.
ராயல் என்ஃபீல்டின் புதிய புல்லட் 650 பைக், அதன் ரெட்ரோ ஸ்டைல், பெரிய இன்ஜின் சக்தி, மற்றும் நவீன அம்சங்களால் இந்திய பைக் சந்தையில் புதிய அடையாளத்தை உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பைக் வெளிவந்தவுடன், 650cc செக்மெண்டில் உள்ள Interceptor 650 மற்றும் Continental GT 650 மாடல்களுக்கு வலுவான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Royal Enfield new Bullet 650 launched Twin cylinder engine bike Do you know how much it costs