ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 ‘மனா பிளாக் எடிஷன்’ – இந்தியாவில் அதிரடி வெளியீடு! விலை எவ்வளவு தெரியுமா?
Royal Enfield Himalayan 450 Mana Black Edition Launched in India Do you know the price
ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் 450 மனா பிளாக் எடிஷன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. ஐரோப்பாவின் EICMA நிகழ்வில் முதல் முறையாக வெளிச்சம் கண்ட இந்த சிறப்பு எடிஷன், இப்போது ரூ.3.37 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு ஹிமாலயன் 450 மாடல்களை விட இது ரூ.17,000 அதிக விலையைக் கொண்டு வருகிறது. புதிய மனா பிளாக் எடிஷனை ராயல் என்ஃபீல்டு வலைத்தளம், ஸ்மார்ட்போன் ஆப் மற்றும் அருகிலுள்ள டீலர்ஷிப்புகள் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.
இந்த எடிஷனின் முக்கிய அம்சம் அதன் நவீன காஸ்மெடிக் வடிவமைப்பு. முழுக்க கருப்பு நிற தாளத்துடன், கிரே நிற அக்சென்ட்கள் சேர்த்து இந்த பைக்கை மிக அழகாக வடிவமைத்துள்ளனர். அதேசமயம், நக்குள் கார்டு, நீளமான ரேலி-ஸ்டைல் சீட், உயர்த்தப்பட்ட முன்புற மட்கார்டு, டியூப்லெஸ் டயர்களுடன் கூடிய வயர்-ஸ்போக் வீல்கள் போன்றவை ஸ்டாண்டர்டாகவே வழங்கப்பட்டுள்ளன.
இதே சமயம், மெக்கானிக்கல் அல்லது டெக்னிக்கல் விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாண்டர்டு ஹிமாலயன் 450 போலவே 452cc லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இது 8,000 rpm-ல் 40 hp பவரையும், 5,500 rpm-ல் 40 Nm டார்க்கையும் உருவாக்கும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், அதே சஸ்பென்ஷன் அமைப்பு, அதே பிரேக்கிங் செட்டப்புகள் ஆகியவை வந்துள்ளன.
ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பு மாற்றத்தால் ஹிமாலயன் 450 மாடல்களின் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மனா பிளாக் எடிஷன் அதைவிட மேலும் உயர்ந்த ரேஞ்சில் அறிமுகமாகியுள்ளது. தற்போது ஹிமாலயன் 450 மாடல்கள் ரூ.3.05 லட்சம் முதல் ரூ.3.20 லட்சம் வரை விலையில் உள்ளன. அவற்றை விட மேலான விலையில் ரூ.3.37 லட்சம் மதிப்பில் தான் மனா பிளாக் எடிஷன் விற்பனைக்கு வந்துள்ளது.
அட்வென்சர் பிரிவில் புதிய லக்ஷுரி டச் சேர்க்கப்பட்டதாக கருதப்படும் இந்த மனா பிளாக் எடிஷன், ஹிமாலயன் ரசிகர்களுக்கு புதிய தேர்வாக உருவெடுத்துள்ளது.
English Summary
Royal Enfield Himalayan 450 Mana Black Edition Launched in India Do you know the price