காதலர் தினம் எதிரொலி - களைகட்டும் ரோஜாப்பூக்கள் விற்பனை.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 ஆம் தேதி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் என்று விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.

இதனால் ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று ரோஜா பூக்களுக்கு பெரிய அளவில் மவுசு இருக்கும். அன்றைய தினம் ரோஜா பூவின் விலை வரலாறு காணாத அளவிற்கு விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் தற்போது ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

ஓசூரில் இருந்து கொண்டுவரப்பட்டு பல வண்ண நிறங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. காதலர்களுக்கு பிடித்தமான நிறங்களை அவர்கள் தேர்வு செய்யும் வகையில் ரோஜா பூக்கள் மீது வண்ண நிற ஸ்பிரே அடித்தும் விற்பனை செய்து வருகிறாா்கள்.

பல நிறங்களில் ரோஜா பூக்கள் கிடைப்பதால் இதனை காதலர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கிறார்கள். பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ரோஜா பூக்கள் வரத்து குறைந்துள்ளது. 

இருப்பினும், காதலர் தினத்தையொட்டி தேவை அதிகரிப்பு காரணமாக ரோஜா பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்துவதற்காக ரோஜாப் பூவை வாங்கிச் செல்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rose flower price increase for valentines day


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->