அதிரடியாக குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை.. பிரதமர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா, உக்ரைன் - ரஷ்யா போர் போன்ற காரணங்களால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டது. கடன் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த சர்வதேச நாணய நிதியம், பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்க வேண்டும். மானியங்களை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தது. 

முதலில் பாகிஸ்தான் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், வேறு வழியின்றி அங்கு பெட்ரோல் - டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே பொருளாதார பாதிப்பில் இருந்து மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்தது. 

இந்நிலையில், பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்தார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50 மற்றும் டீசல் விலை ரூ. 40.64 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீ, ஆட்சிக்கு வந்ததும் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் தற்போது சர்வதேச அளவில்  கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் - டீசல் விலை குறைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol and diesel price reduction in pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->