8 நிறங்களில் அசத்தலாக களமிறங்கியது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..! - Seithipunal
Seithipunal


வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு உட்பட 8 நிறங்களில் ஓலாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் தனது முதல் இருசக்கர வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய விறுவிறுப்புடன் தயாராகி வந்தது. மேலும், மின்சார இருசக்கர வாகனத்திற்காக உலகின் மிகப்பெரிய சார்ஜிங் நெட்ஒர்க் அமைப்புகளையும் உருவாக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் விரைந்து முடித்துள்ளது. 

இம்மாதத்தின் இறுதியில் ஓலா தனது ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கிய நிலையில், இன்னும் சில நாட்களில் ஓலாவின் வாகனங்கள் இந்திய சாலைகளில் பயணம் செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் உற்பத்தி செய்ய தமிழகத்தின் கிருஷ்ணகிரி அருகே தொழிற்சாலை தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. 

வருடத்திற்கு 20 இலட்சம் ஸ்கூட்டர்கள் என்ற அடிப்படையில் உற்பத்தி செய்து, உலகின் முன்னணி நிறுவனமாக ஓலா திகழும் என்றும், இதனால் சுமார் 10000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ஓலா ஏற்கனவே பெருமையுடன் தெரிவித்து இருந்தது. 

வலுவான ஹைப்பர் சார்ஜிங் நெட்ஒர்க் மூலமாக 18 நிமிடத்தில் வாகனத்தின் 50 விழுக்காடு பேட்டரி திறன் பூர்த்தி செய்யப்படும் என்றும், சார்ஜிங் நெட்வொர்க் அமைப்புகள் 400 நகரங்களில் ஒரு இலட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுடன் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓலா நிறுவனம் சுமார் 8 நிறத்தில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. வெள்ளை, கருப்பு, மஞ்சள், சிவப்பு, வான நீலம், மை நீலம், சாம்பல், வெளிறிய ரோஸ் நிறத்தில் உள்ள ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களை ரூ.499 கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். பலவண்ண நிறங்களில் பசுமை புரட்சியை ஏற்படுத்துவோம் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ola Electric Scooter Announced 8 Colors of Bike to Sale Make Green


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->