புதிய க்விட் இ-டெக் 2026 மாடல் அறிமுகம் – நவீன எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் அறிமுகம்! சிங்கில் சார்ஜில் 250 கிமீ போகலாம்..
New Kwid E Tech 2026 model launched Modern electric hatchback introduced Can go 250 km on a single charge
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் ரெனால்ட், தனது புதிய தலைமுறை மின்சார ஹேட்ச்பேக் காரான க்விட் இ-டெக் 2026 மாடலை பிரேசிலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய மாடல், எலக்ட்ரிக் வாகன துறையில் ரெனால்ட் எடுத்து வைக்கும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய சந்தையில் ஏற்கனவே பிரபலமான டேசியா ஸ்பிரிங் EV-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள க்விட் இ-டெக், வெளிப்புற வடிவமைப்பிலும், உள்துறை தொழில்நுட்பத்திலும் பெரிய மாற்றங்களை கொண்டுள்ளது.
முன்புறத்தில் மூடப்பட்ட கிரில், செங்குத்தான ஸ்லேட்டுகள், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் — அனைத்தும் சேர்ந்து இதற்கு ஒரு முழுமையான எலக்ட்ரிக் தோற்றத்தையும், நவீன வடிவத்தையும் அளிக்கின்றன. 14-இன்ச் வீல் கவர்களுடன் கூடிய டூயல்-டோன் டயர்கள், ORVM-களில் உள்ள டர்ன் இன்டிகேட்டர்கள், கருப்பு டோர் கிளாடிங், பக்கவாட்டில் உள்ள EV பேட்ஜிங் — அனைத்தும் காருக்கு ஸ்போர்ட்டியான அழகைத் தருகின்றன.
உள்துறையில், க்விட் EV தனது பழைய மாடல்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக மாறியுள்ளது.10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் – வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆதரவுடன்,7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், USB-C போர்ட்கள், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.மேலும், 290 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பில் ரெனால்ட் எந்த சமரசத்தையும் செய்யவில்லை.ஆறு ஏர்பேக்குகள், ABS, EBD, ESP, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் கேமரா, TPMS, சீட் பெல்ட் ரிமைண்டர், ISOFIX மவுண்ட்கள் ஆகியவை அனைத்தும் இதில் வழங்கப்பட்டுள்ளன.மேலும், லெவல்-1 ADAS எனப்படும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமும் இணைக்கப்பட்டுள்ளது.
பவர்டிரெய்ன் விபரங்களுக்குப் போனால்,26.8 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் கொண்ட க்விட் இ-டெக், ஒரே சார்ஜில் 250 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் எலக்ட்ரிக் மோட்டார் 65 bhp பவரை உற்பத்தி செய்கிறது, இது நகரப்பயணத்துக்கு ஏற்றதாகும்.
இந்திய சந்தைக்கான அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், 2026க்குள் க்விட் EV இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அப்போது இது சிட்ரோன் eC3, டாடா டியாகோ EV போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் இறங்கும்.
மார்க்கெட்டில் மின்சார வாகனங்கள் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில், ரெனால்ட் க்விட் இ-டெக் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிட்-ரேஞ்ச், ஸ்டைலிஷ், சேமிப்பு மாடலாக அமைய வாய்ப்பு உள்ளது.
English Summary
New Kwid E Tech 2026 model launched Modern electric hatchback introduced Can go 250 km on a single charge