தமிழகத்தில் இன்று முதல் தீப்பெட்டியின் விலை உயர்வு.. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இன்று முதல் தீப்பெட்டியின் விலை ஒரு ரூபாயிலிருந்து 2 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி, வேலூர், குடியாத்தம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. தீப்பெட்டி தயாரிக்க தேவைப்படும் அட்டை, மெழுகு, குளோரைடு, பாஸ்பரஸ் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி செலவு என்பது முன்பை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. 

தற்போது ஒரு கிலோ பாஸ்பரஸ் விலையில் ரூ. 410 இருந்து ரூ. 750 ஆக அதிகரித்துள்ளது. குளோரைடு ரூ. 70 இருந்து ரூ. 80 ஆக அதிகரித்துள்ளது.மெழுகு ஒரு கிலோ ரூ. 62 இருந்து ரூ. 85 ஆக அதிகரித்துள்ளது.  அட்டை விலை ஒரு கிலோ ரூ. 42 இருந்து ரூ. 55 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடகை வாகனங்களின் கட்டணமும் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், தீப்பெட்டி உற்பத்தி செலவு முன்பை விட தற்போது அதிகரித்து உள்ளதால், வருகின்ற இன்று முதல் தீப்பெட்டி விலையை அதிகரிக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை ஏற்றம், உற்பத்தி செலவு காரணமாக இன்று முதல் தீப்பெட்டி விலை இரண்டு ரூபாய் ஆக உயர்த்துவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

matchbox price increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->