தங்கம் வாங்குவோருக்கு ஷாக்...! நேற்று குறைந்த விலை, இன்று திடீர் உயர்வு...! இன்றைய விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் விலை குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 320-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.85 சரிந்து ரூ.14 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து, ரூ.14 ஆயிரத்து 65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலையில் இன்று உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளி விலையில் தொடர்ந்து மாற்றமின்றி நீடித்து வருகிறது.

தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளி விலை அதே நிலையில் உள்ளது.அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Low price yesterday sudden increase today What price situation today


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->