இந்திய பத்திகையாளர் மீது தாக்குதல் - அமெரிக்காவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். 

அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து பல வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

அந்த வகையில், அமெரிக்கா நாட்டில் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி நிறுவத்தின் நிருபர் லலித் கே ஜா சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார். 

அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். சிறிது நேரத்திலேயே காலிஸ்தான் ஆதரவாளர்கள் லலித்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த பாதுகாப்பு போலீசார் அவர்களிடம் இருந்து லலித்தை மீட்டு காப்பாற்றினர். இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

khalistan supporters attack indian journalist in america


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->