ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்: வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி..லட்சங்களில் குறையும் ஆடி கார்களின் விலை!
GST Reform Pleasant surprise for customers Prices of Audi cars to be reduced by lakhs
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, ஏராளமான பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் கார்களும் அடங்குகின்றன. புதிய வரிக் குறைப்பு இந்த மாதம் 22-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, ஜெர்மனி சொகுசு கார் நிறுவனமான ஆடி (Audi) தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரி குறைப்பின் பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், ஆடி கார் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஆடி கார் மாடல்களுக்கு ஏற்ப, ₹2.60 லட்சம் முதல் ₹7.80 லட்சம் வரை விலை குறைக்கப்பட உள்ளது.நிறுவனத்தின் எதிர்பார்ப்புப்படி, வரி குறைப்பு மற்றும் பண்டிகை காலம் இணைந்து வருவதால், விற்பனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் சொகுசு கார் வாங்க நினைப்பவர்களுக்கு, வரவிருக்கும் பண்டிகை சீசன் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
English Summary
GST Reform Pleasant surprise for customers Prices of Audi cars to be reduced by lakhs