எனக்கு முதலமைச்சர் ஆகும் கனவு இல்லை - வைகோ பரபரப்புப் பேட்டி!
MDMK Vaiko CM Post TVK Vijay
மதுரை ஆரப்பாளையத்தில் மதிமுக நிர்வாகியின் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேர்தல் அரசியல், நீதிபதி சுவாமிநாதன் விவகாரம் மற்றும் நடிகர் விஜய் குறித்துப் பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்தார்.
தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடு
"தமிழக முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எனக்கு எப்போதுமே கிடையாது. அது பற்றி என்றுமே நான் பேசியதில்லை," என்று வைகோ திட்டவட்டமாகக் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டு முறை மத்திய கேபினட் அமைச்சர் வாய்ப்பு வழங்கியும் தான் ஏற்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டாக மதிமுகவை நடத்தி வருவதாகவும், தனது தம்பிகள் துணை நிற்பதால் கட்சி தொடர்ந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய் மீதான விமர்சனம்
எம்.ஜி.ஆர் உடன் ஒப்பீடு: நடிகர் விஜயின் அரசியல் கனவை விமர்சித்த வைகோ, "விஜய் சினிமாவில் எழுதி கொடுத்து வாசனங்களை பேசுவது போன்று பேசுகிறார்," என்றார். எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து கிளைக் கழகமாகச் செயல்பட்டவர் என்றும், அவர் போன்று ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட விஜய் இல்லை என்றும் தெரிவித்தார்.
கனவு பலிக்காது:
"தவெக விஜயின் கனவு நினைவாகாது. காகிதக் கப்பலில் அவர் கடலில் கடக்க முயல்கிறார். அது வெறும் மணல் கோட்டையாகவே போகும். பொது வாழ்வில் விஜய் நினைக்கும் இடத்திற்கு வரமுடியாது," என்று வைகோ கருத்துத் தெரிவித்தார்.
English Summary
MDMK Vaiko CM Post TVK Vijay