பட்ஜெட் 2026க்கு பின் தங்கம் விலை சரிவு – இனி என்ன நடக்கும்? சீக்ரெட்டை உடைத்த கோல்டு குரு சாந்தகுமார்.. நோட் பண்ணுங்க - Seithipunal
Seithipunal


மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. இந்த சூழலில், ‘கோல்டு குரு’ என அறியப்படும் சாந்தகுமார், ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில், பட்ஜெட் அறிவிப்புகளின் தாக்கம் மற்றும் எதிர்கால தங்கம் முதலீட்டு போக்குகள் குறித்து விரிவாக விளக்கினார்.

2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அதே நேரத்தில் இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமாக சரிந்தன. இதற்குக் காரணமாக, எதிர்கால வர்த்தகம் (Futures & Options) மீதான செக்யூரிட்டி டிரான்ஸாக்ஷன் வரி (STT) உயர்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் MCX போன்ற சந்தைகளில் தங்கம், வெள்ளி வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

பல மாதங்களாக நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த தங்க இறக்குமதி வரி (Import Duty) குறைப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தற்போது 6% ஆக உள்ள இந்த வரி குறைக்கப்பட்டிருந்தால், ஒரு சவரன் தங்கம் 8,000 முதல் 11,000 ரூபாய் வரை குறைந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சாந்தகுமார் தெரிவித்தார். அதே நேரத்தில், வரி உயர்த்தப்படாததும் ஓரளவு நிம்மதியான விஷயமாக இருந்தாலும், எதிர்பார்ப்பு நிறைவேறாததால் சந்தையில் ஏமாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

பட்ஜெட்டுக்கு முன் வரி குறையும் என்ற எதிர்பார்ப்பால், தங்கம் விலை சுமார் 9% வரை தற்காலிகமாக சரிந்ததாகவும், வரி குறைக்கப்படாத நிலையில் இந்த சரிவு நீண்ட காலம் நீடிக்காமல் விலை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bonds – SGB) தொடர்பாகவும் முக்கியமான சட்ட மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் ரிசர்வ் வங்கியிடமிருந்து நேரடியாக வாங்கி, 8 ஆண்டுகள் முழு முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கும். பங்குச் சந்தையில் பிற முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கப்படும் SGB-க்களுக்கு இனி இந்த வரி சலுகை கிடையாது என்பதையும் அவர் நினைவூட்டினார்.

திருமண தேவைக்காக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு, தற்போதைய நிலை ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம் என்றும் சாந்தகுமார் கூறினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு சவரனுக்கு சுமார் 16,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதால், இப்போது வாங்குவது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

எதிர்காலத்தைப் பற்றி பேசும்போது, சர்வதேச அரசியல் சூழல் மற்றும் அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, இந்த ஆண்டு இறுதியில் தங்கம் விலை மீண்டும் வேகமாக உயர வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்தார். 2026 இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் 2 லட்சம் ரூபாயையும், ஒரு கிலோ வெள்ளி 6 லட்சம் ரூபாயையும் எட்டக்கூடும் என்றார்.

முதலீட்டாளர்களுக்கு அவர் வழங்கிய முக்கிய அறிவுரை என்னவெனில், விலை இன்னும் குறையுமா என்று முழுமையாக காத்திருக்காமல், தங்களிடம் உள்ள முதலீட்டு தொகையின் 50 சதவீதத்தை இப்போதே தங்கத்தில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 50 சதவீதத்தை சந்தை நிலவரத்தை கவனித்து அடுத்த கட்டமாக முதலீடு செய்வது பாதுகாப்பான அணுகுமுறை என அவர் அறிவுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices fall after Budget 2026 what will happen next Gold guru Shanthakumar breaks the secret Take note


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->