ஒரு சவரன் தங்கம் விலை 1.50 லட்சம்.. அதிர்ச்சியில் இலங்கை மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்றுக்கு பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை இலங்கையை சீர்குலைந்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத்துறையும் முடங்கி பொருளாதாரத்தை தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு கொண்டு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

அந்நிய செலாவணி குறைந்ததால் இலங்கை பணத்தின் மதிப்பும் குறைந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்ததால் ஒரு கிலோ பருப்பின் விலை ரூ. 250, சர்க்கரையின் விலைரூ. 215, உருளைக்கிழங்கின் விலை ரூ. 300, பெரிய வெங்காயம் விலை ரூ. 400, உளுந்து கிலோ ரூ. 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. எரிபொருள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ. 75 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோலவே பெட்ரோல் விலையும் ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 39 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இலங்கை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold Price in SriLanka


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->