இமாலய உச்சத்தில் தங்கம்...! வெள்ளியும் புதிய வரலாறு! இன்றைய விலை நிலவரம் என்ன...?
Gold peak Himalayas Silver also makes new history What current price situation
தங்கம் விலை மீண்டும் அடங்கா குதிப்பில் செல்கிறது. கடந்த 12-ந் தேதி முதல் தங்க சந்தை முழுக்க பரபரப்பாகி, விலை ஏற்றம் நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொடுகிறது. 11-ந் தேதி ஒரு சவரன் ரூ.96,400-க்கு விற்ற தங்கம், அடுத்த நாளே ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்து ரூ.98,960-ஆக பாய்ந்தது.
இந்த ஏற்றத் தொடர்ச்சி அங்கு நிற்கவில்லை. நேற்று முன்தினம் மட்டும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையாகி, தங்கம் வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆண்டு தொடக்கத்திலேயே “வருட முடிவுக்குள் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும்” என வியாபாரிகள் கணித்தது, இப்போது நிஜமாகியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததே இந்த தங்க ஏற்றத்தின் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விலை மேலும் உயரும் என எதிர்பார்த்த வேளையில், நேற்று திடீர் திருப்பமாக தங்கம் ‘அந்தர்பல்டி’ அடித்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12,515-க்கும், சவரன் ரூ.1,00,120-க்கும் விற்ற நிலையில், நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கும், சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.98,800-க்கும் விற்பனையானது.
இதனால் தங்கம் மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சரிந்தது.ஆனால் இந்த அமைதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இன்று மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.12,500-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து மீண்டும் ரூ.1 லட்சத்தை தொட்டுள்ளது.
இந்த ஏற்றம் நகைப் பிரியர்களையும் முதலீட்டாளர்களையும் ஒரே நேரத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் வானளாவி உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்ற வெள்ளி, நேற்று சிறிதளவு சரிந்து கிராமுக்கு ரூ.211-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இன்று மீண்டும் புதிய சாதனை படைத்து, கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.223-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
17.12.2025 – ஒரு சவரன் ரூ.1,00,000
16.12.2025 – ஒரு சவரன் ரூ.98,800
15.12.2025 – ஒரு சவரன் ரூ.1,00,120
14.12.2025 – ஒரு சவரன் ரூ.98,960
13.12.2025 – ஒரு சவரன் ரூ.98,960
12.12.2025 – ஒரு சவரன் ரூ.98,960
11.12.2025 – ஒரு சவரன் ரூ.96,400
10.12.2025 – ஒரு சவரன் ரூ.96,240
English Summary
Gold peak Himalayas Silver also makes new history What current price situation